அன்பான இனிய வலைபதிவர்கள் அனைவருக்கும் இந்த புத்தாண்டு நன்னாளில் எல்லா வளமும் பெற என் வாழ்த்துக்ளை பகிர்ந்து கொள்கிறேன்.

இதே நன்னாளில் சில உறுதி மொழிகளை எடுப்போம்.

1) மனிதநேயம்
2) மத,ஜாதி,இன,நிற வேறுபாடுகளை களைவோம்.
3) வஞ்சித்தல்,பொறமை களைவோம்.
4) தற்புகழ்ச்சியை வேறுப்போம்
5) நட்பை வளர்ப்போம்
6) சுய மரியாதை,உரத்த சிந்தனையுடன் செயல்படுவோம்.
7) கல்வியின் முக்கியத்தை அனைவருக்கும் எடுத்து செல்வோம்.

இரண்டு வருடங்களாக வலைபதிவை படித்தே வந்தால் எப்படி? நாமும் எதாவது எலுதலாமே என்று நினைத்து Ignite செய்தாகி விட்டது இனி என்ன சொல்ல எப்படி சொல்ல என்று சிந்திக்க வேண்டும்.

ரூம் போட்டு சிந்திக்கலாமா இல்லை மொக்கையாக சிந்திக்கலாமா? காலம் பதில் சொல்லும்.

பார்க்க சகிக்காத ஜோடி NO1 எனும் நிகழ்ச்சி முடிந்தும் அதை வைத்து கேலி கூத்து என்று ஒவர் பில்ட்ப் கொடுத்து வரும் விஜய் டிவியின் நிகழ்ச்சி மிக சலிப்பைதான் தருகிறது.

அதில் வரும் host கூட சரியான தேர்வு இல்லை. நடுவர்களாக வந்த சங்கிதா,மாஸ்டர் சுந்தரம் பரவயில்லை ஆனால் சிம்புவின் அலும்பல் அச்சச்சோ அவருடைய படத்தில் கூட இப்படி அவர் நடித்ததில்லை என்றே சொல்ல வேண்டும்.

சரி இந்த நிகழ்சியும் இந்தி இறக்குமதிதானே காப்பி பேஸ்ட் சரியாக செய்ய தெரியலேயே நம்மவர்களுக்கு என்றே தோணுகிறது. ஜவேத் ஜாப்ரி கூழுவினர் எவ்வளவ சிறப்பாக நிகழ்ச்சி நடத்துகின்றன்ர் என்பது நிகழ்ச்சி பார்த்தவர்கலுக்கு நன்றாகவே தெரியும்.

விஜய் டிவியின் தரம் ஏன் இப்படி ஆச்சு என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

வெள்ளகார பசங்க என்னமா பாட்டு போடுறான்கய்யா.நீங்களும் பார்த்து விட்டு எதாவது சொல்லி வையுங்களேன்

No One – Alicia keys

Falling Slowly-Glen and Marketa

Follow

Get every new post delivered to your Inbox.